Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு தமிழ் இளைஞர் கொலை; வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு

முல்லைத்தீவு தமிழ் இளைஞர் கொலை; வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் இளைஞர் கபில்ராஜ் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டி, இந்த சம்பவத்திற்கும் வடகிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் ராணுவ அராஜகங்களுக்கும் எதிராக வடக்கு–கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர், “கபில்ராஜ் சம்பவம் நாளை எவருக்கும் நேரலாம்; இது ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பாதுகாப்பு பிரச்சினை” என வலியுறுத்தினார்.

சாணக்கியன், 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்காக வடக்கு–கிழக்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பையும், வரும் புதன்கிழமை (13) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்திற்கும் ஆதரவை கோரினார். “முல்லைத்தீவில் 2025-இலும் கூட தமிழ் இளைஞர்கள் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழப்பது பாரதூரமான விடயம்” என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும், கடந்த சில ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, மாகாண சபைத் தேர்தல் தாமதம், மக்களின் காணிகளை விடுவிக்காதது உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை என்றும், வடக்கு–கிழக்கில் ராணுவ முகாம்களை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த போராட்டத்துக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையகத் தமிழர் சமூகமும் ஆதரவு தெரிவித்துள்ளார். “இது ஒரு தனிப்பட்ட சம்பவத்துக்கான எதிர்ப்பு மட்டுமல்ல; வடக்கு–கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பிற்காக நடைபெறும் ஒரு ஒற்றுமை போராட்டம்” என சாணக்கியன் கூறினார்.

சர்வதேச விசாரணை தேவைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், “நீதியைப் பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என உறுதியளித்தார்.

நிகழ்வின் இறுதியில், வடக்கு–கிழக்கில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, ஹர்த்தால் போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
ஜனாதிபதி செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு