நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்று தீவிரமடைந்து வருவதால், நாளை (06) முதல் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியமும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








