நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக அரசாங்கம் பரிசீலனை நடத்தி வருகின்றதாக சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அமைச்சரவை, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் தலைவர்கள் வாரத்தின் போது இதற்கான அதிகாரபூர்வ அணுகுமுறையை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் சமீபத்திய ஐ.நா. பொதுச் சபை கூட்டங்களில் பலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளதாக அறிவித்திருந்தன.
வெளியுறவு அமைச்சர் பீட்டர்ஸ் கூறியதாவது, “நாங்கள் இந்த பிரச்சினையை கவனமாக ஆராய்ந்து, நியூசிலாந்தின் கொள்கைகள் மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டு செயல்பட விரும்புகிறோம். பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது எப்போது என்பது முக்கியமானது நியூசிலாந்து இதை தெளிவாக ஆராய்ந்து வருகிறது” என தெரிவித்தார்.








