வடக்கு–கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாவது ஆண்டுப் பயணமாக முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவு, தனது 12ஆம் நேற்று (11) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் மக்களின் உற்சாகப் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மட்டக்களப்பின் சுங்காங்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த மக்கள் அணியின் திரள் செயற்பாடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியது.
இச்செயல்முனைவு, நியாயமான அரசியல் உரிமைகளைப் பெற்றிடும் வலிமையான மக்கள் குரலாக தொடர்ந்து முன்னேறி வருகிறது.
















