திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திவுல்வெவ மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








