மனிதாபிமான தீர்ப்புகளால் உலக மக்களின் இதயங்களை வென்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ மறைந்துள்ளார்.
அவர் நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (20) உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய பிராங்க் காப்ரியோ, விசாரணைகளில் காட்டிய அன்பும் கருணையும் காரணமாக உலகளவில் பாராட்டப்பட்டார்.
சமூகநீதியை வலியுறுத்திய அவரது தனித்துவமான தீர்ப்புகள் பெருமளவு மக்களால் மதிக்கப்பட்டு, அவருக்கு “கருணையின் நீதிபதி” என்ற பெயரை ஏற்படுத்தின.
இறக்கும் போது அவருக்கு வயது 88 ஆகும்.








