Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் ஜனாதிபதியால் வைக்கப்படவுள்ளது

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான அடிக்கல் ஜனாதிபதியால் வைக்கப்படவுள்ளது

11 months ago
in செய்திகள்

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (24) வருகை தந்த அமைச்சர், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் ஆகியோருடன் கூட்டாக ஊடக சந்திப்பினை நடத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்காக எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி, மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து யாழ். மாவட்ட செயலகத்தில் கடவுசீட்டு, அலுவலகத்தை திறந்து வைத்து, கடவுசீட்டு வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பார்.

பின்னர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்து, நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன், சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார்.

மறுநாள் 02ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து, வட்டுவாகல் பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் தென்னை முக்கோண வலய செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

எமது அரசாங்கம் வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தற்போது நாட்டின் வருமானம் அதிகரித்து உள்ளது.

அதனால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திக்காக அதிகளவான நிதிகளை ஒதுக்கீடு செய்யப்படும். அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தியே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!

July 30, 2026
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!
செய்திகள்

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

July 30, 2026
13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!
செய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

July 30, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!

July 30, 2026
Next Post
ரணில் கைது தொடர்பில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து அறிக்கை

ரணில் கைது தொடர்பில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு