இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 25, 2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு மெய்வல்லுனர், மேசைப்பந்து, ஜிம்னாஸ்ரிக் சங்கங்களின் பதிவை இடைநிறுத்தியுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமாக தேர்தல் நடத்தப்படும் வரை இடைநிறுத்தப்பட்ட மூன்று சங்கங்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று வர்த்தமானியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.









