இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), வட்டளையில் அமைந்த கிடங்கொன்றில் திடீர் சோதனை நடத்தி, விற்பனைக்காக சட்டவிரோதமாக வைத்திருந்த 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றியுள்ளது.
அதிகாரசபையின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழங்களின் பெறுமதி சுமார் ரூபாய் 65 இலட்சம் ஆகும்.

சோதனைக்குப் பின், அந்த காலாவதியான சரக்குகள் உடனடியாக முத்திரையிடப்பட்டன. இதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் சந்தைக்கு வராமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் அறிவித்துள்ளது.








