Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது 400 மில்லியானா? 800 மில்லியனா?; அர்ச்சுனாவின் கருத்து தொடர்பில்அன்ரனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது 400 மில்லியானா? 800 மில்லியனா?; அர்ச்சுனாவின் கருத்து தொடர்பில்அன்ரனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

10 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது? இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் என் மீது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். எனவே அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என இந்த ஊடக சந்திப்பு ஏற்படுத்தினேன்.

கிழக்கு மாகாணத்தில் தேசத்துக்கு மகுடம் என்ற திட்டத்தின் கீழ் யு.என்.டி.பி நிறுவனத்தால் மீனவர்களுக்காக 9 மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டது. இருந்த போதும் தற்போது களுவங்கேணி, பாலமீன்மடு ஆகிய இரண்டு நிலையங்கள் மாத்திரம் இயங்கி வருகின்றது.

ஏனைய அனைத்து மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள் துருப்பிடித்து இயங்க முடியாது. பாலடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த கடற்தொழில் நீரியல் வளத்துறைக்கு சொந்தமான இந்த இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீனவர் சங்கங்களிடம் இருந்து நான் 5 வருட குத்தகை அடிப்படையில் சட்ட ரீதியாக பெற்றுக் கொண்டேன்.

அதேவேளை 2021 பாராளுமன்றத்தில் அப்போது கடல் தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் களுவங்கேணியில் மண்ணெண்னைய் நிரப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. இதை மீனவர்களுடைய பயனுக்காக திறக்கமுடியாதா என ஒரு கேள்வி இரா.சாணக்கியன் எழுப்பியிருந்தார். அது தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் அதை இயக்க யாரும் முன்வராததால் அதை கப்பல் போக்குவரத்து திணைக்களத்துக்கு வழங்கி அதை இயக்க வைக்குமாறு கூறியிருந்தார்.

இதனை ஊடகவாயிலாக அறிந்த நான், சம்மந்தப்பட்ட மீனவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு அதனை திருத்தி அமைத்து இயக்குவேன் என கூறி 5 வருட குத்தகைக்கு பெற்றுக் கொண்டேன். அதில் தற்போது 4 வருடம் முடிவுற்றுள்ளதுடன் இன்னும் ஒருவருடம் இருக்கின்றது.

இந்த நிலையில் இரா.சாணக்கியன் டக்ளஸின் செல்வாக்கினால் எனக்கு வழங்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார்.

இரா.சாணக்கியனின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் கல்லாற்றில் தேசத்துக்கு மகுடத்தின் திட்டத்தில் வந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று வரை திறக்க முடியாது துருப்பிடித்து கட்டிடத்தின் கதவுகள் கழற்றப்பட்டு பாழடைந்துள்ளதை அவர் திறக்க வைத்திருக்கலாம் அதை செய்ய முடியாத இவர் தற்போது இயங்கி கொண்டிருக்கும் மீனவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் எவ்வாறு ஏனையவை இயங்காது இருப்பது போல இயங்காது தடுப்பதற்கு அல்லது அவருடைய பினாமிகளுக்கு அதை கைப்பற்றி வழங்குவதற்கு அரச அதிகாரிகளை தவறான முறையில் வழிநடத்தி பாரிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்திக்காக அவருக்கு 400 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கினார் அதில் எருவில் கோடைமடு குளத்தில் பதிவு செய்யப்படாத விளையாட்டு மைதானத்துக்கு 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முடிவுற்றதாக காட்டி பணத்தை பெற்றுள்ளனர்.

இதேபோன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இதுவரை பூர்த்திசெய்யப்படாமல் பூரணப்படுத்தி உள்ளது என நிதி வழங்கப்பட்டது. இதை அறிந்து நான் இரா.சாணக்கியனுக்கு மற்றவர்கள் போல செம்பு தூக்கி மௌனிகளாக கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க முடியாது இது மக்களின் வரிப்பணம் இதனை வீண் விரயம் செய்ய விடமுடியாது.

நான் இந்த நாட்டின் ஒரு குடிமகன் என்ற ரீதியில் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை எனவே தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தேர்தல் திணைக்களத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தேன்.

இதனால் அவர் என்னுடன் காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கான காரணமாக என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி திறக்காமல் இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க முடியாது. திறந்திருப்பதை மூடுவதற்கு முயற்சி செய்து என்னை பழி வாங்குகிறார் என எனக்கு நன்றாக தெரியும். இது தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் மற்றும் பணிப்பாளருக்கு எழுத்து மூல அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்.

எனவே உங்களுடைய இந்த பூச்சாண்டி, அடாவடி அரசியலை விட்டுவிட்டு தமிழரசு கட்சி கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது அவ்வாறு இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். அதைவிடுத்து ஆயுத குழுக்கள் போன்று அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். அதேவேளை கடந்த காலத்தில் ஆயுத குழுக்கள் எவ்வாறு இருந்ததே அவ்வாறு தமிழரசு கட்சியை இன்று ஆயுத குழு பாணியில் அழைத்துச் செல்கிறீர்கள்? என்ற சந்தேகம் எழுகின்றது.

தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இரா. சாணக்கியனுக்கு 400 மில்லியன் ரூபா ரணில் ஒதுக்கியதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் எழுத்து மூலம் அறிக்கை வந்துள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் ரணில் 800 மில்லியன் ரூபாவை இரா.சாணக்கியனுக்கு வழங்கியுள்ளதாக அதற்கான ஆதாரம் உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? எங்கே அந்த பணம்?

அதேவேளை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் 3 கோடியே 99 இலட்சம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கின்றது. எது எவ்வாறக இருந்தாலும் மாவட்டத்தில் நாளை கஞ்சி குடிப்பதற்கு நமக்கு கஞ்சிக்காவது வழி கிடைக்குமா என ஆயிரக்கணக்கான பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் ஏங்கி தவிக்கின்றனர்.

ஆனால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தை அவர்களின் வாழ்வாதாரத்துக்காக அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தாது தேவையற்ற முறையில் முறையற்ற விதத்தில் இந்த பணத்தை உங்கள் ஊரிலே மாத்திரம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செய்துள்ளார்.

அபிவிருத்திக்கு வந்த பணத்தில் 3 கோடியே 99 இலட்சம் திருப்பி அனுப்பினால் எந்த அரசாங்கமும் மாவட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்காது அதை சுட்டிக் காட்டினால் நாங்கள் குற்றவாளியா? அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை சரியாக பயன்படுத்த தெரியாது விட்ட தவறை சுட்டிக்காட்டிய என்னை பழிதீர்க்க எனது குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒருவருக்கு வழங்க பகிரங்க கேள்வி மனு செய்யுமாறு அரச அதிகாரிகளை அச்சுறுத்தி தவறான முறையில் வழிநடத்துகிறார்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு தமிழரசு கட்சியின் சரியான பாதையில் செல்லுங்கள் ஆயுத குழுக்கள் போல செயல்பட்டு தமிழரசு கட்சி அகால பாதாளத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

ரணில் வழக்கின் போது பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.