Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடு; ட்ரம்ப் நிர்வாகம் முடிவு

அமெரிக்காவில் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடு; ட்ரம்ப் நிர்வாகம் முடிவு

10 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதில் விசாக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசாவில் கட்டுப்பாடுகளை கொண்டு வர ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டு மாணவர்கள், தொழிலாளர்கள், வெளிநாட்டு ஊடக பிரதிநிதிகளுக்கான விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படும் கால அளவு கட்டுப்படுத்தப்படும்.

இந்த புதிய விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்து உள்ளது. சட்டவிரோதமாக தங்குபவர்களை கண்டு பிடிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் இந்த மாற்றம் தேவை என்று உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.

சர்வதேச மாணவர்கள் விசா (எப்) மற்றும் கலாச்சார பரிமாற்றத் திட்டங்களில் பார்வையாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் விசாக்களுக்கு (ஜெ) இனி அதிகபட்சமாக 4 ஆண்டுகள் தங்கியிருக்க கால அவகாசம் கொடுக்கப்படும். காலஅவகாசத்தை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது படிப்பு மற்றும் வேலையில் இருக்கும்வரை விசா காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாவுக்கு காலக்கெடு விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு வேலை தேட 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த அவகாசம் 30 நாட்களாக குறைக்கப்படுகிறது.

முதுகலை படிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திட்டத்தில் இருந்து இன்னொரு பாடத்திட்டத்திற்கு மாற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஊடக பிரதிநிதிகளுக்கான விசா வைத்திருப்பவர்கள் 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படும். இந்த புதிய விசா கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026
Next Post
மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

மடகாஸ்ரின் முன்னாள் மன்னரது மண்டை ஓட்டை ஒப்படைத்த பிரான்ஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு