Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தொன்று மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர சபை நிர்வாகத்தின் அலட்சியபோக்கு கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு தெரிவித்துள்ளார்.
யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில்,

யாழ்ப்பாணம் முன் வீதி அல்லது இராசேந்திர பிரசாத் வீதியின் மேற்கு புறமாக புதிதாக அமைக்கப் பட்டு வரும் கட்டிட காணிக்கு கிழக்காக யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உரித்தான நிலப்பரப்பு 04 குளி 09 விஸ்தீரணம் கொண்ட காணி மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தேர்தல் மூலமான சபை பதவி ஏற்ற 2025 ஜூன் மாதம் முதல் நான் சுட்டிக் காட்டி வந்த போதும் காத்திரமான எந்த நடவடிக்கை எதுவும் இது வரை எடுக்கப் படாமை மிகவும் வருத்தத்திற்கு உரியது.

ஆகக் குறைந்தது இருபத்தைந்து கோடி பெறுமதியான இந்த சொத்து மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர நிர்வாகத்தின் அலட்சிய போக்கு கண்டிக்க தக்கது.

இது இவ்வாறு இருக்கையில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் மாநகரசபை காணிகள் தொடர்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறதுயாழ்ப்பாணம் சுற்றுலாப்

எனவே மேற்குறிப்பிட்ட விடயத்தை வெகு முக்கியம் வாய்ந்த விடயமாக எடுத்து இந்த குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்துவதுடன் அடுத்த நான்கு வாரத்திற்குள் எடுக்கப் பட்ட நடவடிக்கை பற்றிய முன்னேற்றத்தை எமக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விடயம் தொடர்பாக மக்கள் அறிதலுக்காக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வந்தது போல இந்த கடிதமும் ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது – என்றுள்ளது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

November 9, 2026
ஏழை – பணக்காரர் இடைவெளியைக் குறைக்க கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும்; பில்கேட்ஸ் வலியுறுத்தல்!
உலக செய்திகள்

ஏழை – பணக்காரர் இடைவெளியைக் குறைக்க கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும்; பில்கேட்ஸ் வலியுறுத்தல்!

November 9, 2026
கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி
செய்திகள்

கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி

November 9, 2026
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!
செய்திகள்

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

November 9, 2026
இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!

November 9, 2026
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்
செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

November 9, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு