Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏழை – பணக்காரர் இடைவெளியைக் குறைக்க கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும்; பில்கேட்ஸ் வலியுறுத்தல்!

ஏழை – பணக்காரர் இடைவெளியைக் குறைக்க கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும்; பில்கேட்ஸ் வலியுறுத்தல்!

35 minutes ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான பொருளாதார இடைவெளி வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், உலகக் கோடீஸ்வரர்களுக்கும் மனிதர்களுக்குப் பதிலாகப் பணியமர்த்தப்படும் ரோபோக்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான வளர்ச்சி பெரும் செல்வத்தை உருவாக்கி வருகின்ற போதிலும், அதன் நன்மைகள் ஏற்கனவே பெரும் செல்வந்தர்களாகவும், வலுவான நிறுவனங்களாகவும் இருப்பவர்களிடமே அதிகளவில் சென்றடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும், செல்வந்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மற்றும் அறக்கட்டளை உதவிகள் மாத்திரம் இந்த இடைவெளியைக் குறைக்கப் போதுமானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அரசாங்கங்கள் தமது வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, பெரும் செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, மனிதத் தொழிலாளர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் ரோபோக்களுக்கும் வரி விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அதற்கான வரிகளைச் செலுத்தும் நிலையில், ரோபோக்களைப் பணியில் ஈடுபடுத்தும்போது அவற்றுக்கான செலவுகளைத் தொழில் செலவுகளாகக் கணக்கிடுவதால் வரிச் சலுகைகள் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோபோக்களுக்கு வரி விதிப்பதன் மூலம் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துவதுடன், தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி வழங்குவதற்கான நிதியையும் திரட்ட முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், என்விடியா நிறுவனத்தின் தலைவரான ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்பத் துறைத் தலைவர்கள் பில்கேட்ஸின் ரோபோக்களுக்கு வரி விதிக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!
செய்திகள்

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!

November 9, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

November 9, 2026
கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி
செய்திகள்

கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி

November 9, 2026
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!
செய்திகள்

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

November 9, 2026
இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!

November 9, 2026
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்
செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

November 9, 2026
Next Post
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு