Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எமது இனத்தை அழித்தவர்கள் விசாரணை செய்ய அருகதையற்றவர்கள்; செல்வம் அடைக்கலநாதன்

எமது இனத்தை அழித்தவர்கள் விசாரணை செய்ய அருகதையற்றவர்கள்; செல்வம் அடைக்கலநாதன்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணி உள்ளடங்களாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கும், இனப் படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (29) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை நாம் ஒரு ஒருபோதும் மறந்து விட முடியாது.

இன்று வடக்கு கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்களுடைய மனித எலும்புக்கூடுகள் வெளி வருகிறது. வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் காணப்படுகின்றது.

முதல் முறையாக மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது மன்னாரிலே.அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தில் கூடுதலான மனித எலும்புக்கூடுகள் உள்ள மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல் சம்மந்தமாக செயல்பட்டவர்கள் தண்டிக்கும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னைநாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஏற்கனவே கூறியது, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மை தொகையை ஐ.நா.சபை வரை சென்றுள்ளது.

இன்று வரை அவரது எண்ணிக்கையே அங்கும் உள்ளது. அவ்வாறான ஒரு சூழலில் ஆயர் கூறிய வார்த்தை கள்ளர்கள் கள்ளர்களை விசாரணை செய்ய முடியாது என்றது போல எங்களுடைய இனத்தை அழித்தவர்கள், எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.

இந்த கையெழுத்து வேட்டை ஐ.நா.வரைக்கும் சென்று எமக்கு நீதியாக மாற வேண்டும்.எம் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம்.வடக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பிரிதொரு தினத்தில் இடம் பெறும்.பல ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எமது இலக்கை அடைய முடியும்.இதனூடாகவே எமது கோரிக்கையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் அருட் தந்தையர்கள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,பொது மக்கள்,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்ட மை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு  எதிராக சிஐடியில் இரு முறைப்பாடுகள்

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக சிஐடியில் இரு முறைப்பாடுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.