Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; கோவிந்தன் கருணாகரம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்; கோவிந்தன் கருணாகரம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போராட்டங்களில் இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று (29) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,

நாளை ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் பங்கேற்க உள்ளனர்.

கருணாகரம் குறிப்பிட்டதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று வரை ஆயிரக்கணக்கில் இருப்பினும், உண்மை நிலை வெளிப்படுத்தப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரத்தை மறைக்க முடியாது, எனவே அரசாங்கம் அவர்களின் நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “எங்களுடைய உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், எமது இனத்தை அழித்தவர்கள் இன்று அந்த விசாரணைகளை நடத்த அருகதையற்றவர்கள். அதனால், சர்வதேச சமுதாயமே உண்மையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னெடுப்பில் வடக்கு–கிழக்கில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படும் கையெழுத்துகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு திரும்பினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீடு திரும்பினார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு