இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பொது கையொப்ப சேகரிப்பு பிரசாரத்தைத் தொடங்க இரண்டாம் தலைமுறை போர் வீரர் பெருஞ்சுவர் இயக்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கொழும்பு 08, கோட்டே வீதியில் உள்ள என்.எம்.பெரேரா மண்டபத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொது கையொப்ப பிரசாரத்தின் தொடக்க விழாவில் தேஹிபே சந்திரவிமல தேரர், பலாங்கொட ரத்னபிரிய தேரர், அட்மிரல் (ஓய்வு) டி.கே.பி. தசநாயக்க, அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர, மேஜர் ஜெனரல் சாகி கல்லகே, மேஜர் ஜெனரல் சேனவடுகே, வைத்தியர் வசந்த பண்டார, யசஸ்தா ராமதாச, சட்டத்தரணி நுவன் பெல்லந்துடுவ, முன்னாள் சுங்க பணிப்பாளர் எஸ்.கே.எஸ்.ஏ.சேனநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பொது மனுவில் கையொப்பமிடுவதற்கு நாளை மறுதினம் (01) கொழும்பு கோட்டையிலும் கண்டி, குருநாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.








