Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில் கைதான அச்சத்தில் ஒன்றிணைந்துள்ள அனைவரும் கள்வர்கள்; கைது செய்வது இலக்கு என்கிறது அரச தரப்பு

ரணில் கைதான அச்சத்தில் ஒன்றிணைந்துள்ள அனைவரும் கள்வர்கள்; கைது செய்வது இலக்கு என்கிறது அரச தரப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சம்பிக ரணவக்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் கள்வர்களேஎன தொழிற் பயிற்சிகள் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.

தாம் குற்றமிழைத்தவர்கள் என்பதால் ரணிலை கைது செய்யதவுடன் அச்சத்தில் இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் இணைந்தால் கள்வர்களை கைது செய்வது இன்னும் இலகுவாகும் என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியினதோ பாராளுமன்றத்தினதோ அல்லது அமைச்சர்களதோ கடமையல்ல. அதற்காக பிரத்தியே நிறுவனங்கள் உள்ளன.

கடந்த ஆட்சி காலங்களில் இந்த நிறுவனங்கள் அப்போதைய ஆட்சியாளர்களின் இரும்பு பாதணிகளுக்கு இரையாகியிருந்தன.

ஆனால் தற்போது எமது ஆட்சியில் அவ்வாறான நிலைமை இல்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை.

எனவே ஆளுங்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் சட்டம் அனைவருக்கும் சமமாக பிரயோகிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க இழைத்த குற்றங்களையும் தவறுகளையும் மறைக்க முடியாது. அவர் இழைத்த குற்றங்களில் ஒன்றுக்கு மாத்திரமே விளக்கமறியல் சென்றார்.

ஆனால் இன்னும் பல கிடப்பில் உள்ளன. தம்மை பிரபலமானவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் யார்? ஜனாதிபதி நிதியத்திலிருந்து தமது நோய்களுக்காக நிதி பெற்ற அவர்கள் பிரபலங்களா? பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புலமைப் பரிசில் பெற்று கற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவர்கள் தம்மை பிரபலங்கள் எனக் கூறிக் கொண்டு நாட்டில் தேசிய சொத்துக்களை அழித்தவர்களாவர். அவர்கள் இன்று பிரபலங்கள் என்ற நிலையிலிருந்து இறக்கப்பட்டு சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அவர்களுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் கள்வர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

எனவே இவர்கள் ஒன்றிணையும் போது பெரிய பூட்டு ஒன்றைப் பூட்டினால் அனைவரையும் ஒரே சந்தர்ப்பத்தில் கைது செய்ய முடியும். தாம் குற்றவாளிகள் என்பதை தெரிந்து கொண்டு தான் அவர்கள் ஒன்றிணைந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
Next Post
ரஷ்யாவின் ஆதரவாளராகச் செயல்படும் டிரம்ப்; போர்த்துகல் ஜனாதிபதி குற்றச்சாட்டு

ரஷ்யாவின் ஆதரவாளராகச் செயல்படும் டிரம்ப்; போர்த்துகல் ஜனாதிபதி குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு