Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யாவின் ஆதரவாளராகச் செயல்படும் டிரம்ப்; போர்த்துகல் ஜனாதிபதி குற்றச்சாட்டு

ரஷ்யாவின் ஆதரவாளராகச் செயல்படும் டிரம்ப்; போர்த்துகல் ஜனாதிபதி குற்றச்சாட்டு

11 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெளிப்படையாக ரஷ்யாவின் ஆதரவாளராகச் செயல்படுகிறார் என, போர்த்துகல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டிசோசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன், சர்வதேச இராணுவ அமைப்பான, நேட்டோவில் இணைய முயற்சித்தது.

இது தங்களுக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, யுக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடர்ந்தது.

இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

இது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 15 இல் அலஸ்காவில், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களையும் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடான போர்த்துகலின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ, உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப், பாரபட்சமின்றி ரஷ்யாவின் கருவியாக இருப்பதாகவும், அவர் ரஷ்யாவை வெளிப்படையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், பாரம்பரியமாக அமெரிக்காவுடன் கூட்டாளிகளாக இருந்த யுக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், தற்போது தங்கள் நலன்களைப் பாதுகாக்க அழுத்தம் தரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன எனவும், ட்ரம்ப் ஒரு தரப்புடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார் என்றும் போர்த்துகல் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
Next Post
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிப்பு

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு