அரலகங்வில, கனிச்சியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஈக்கில் துடைப்பம் செய்வதற்கு தேவையான மூல பொருட்களை தேடி சென்ற போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








