ஏறாவூரில் இன்று (02) காலை கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது.
ஓட்டமாவடியில் இருந்து கோழிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென குடைசாய்ந்து சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
இலேசான மழைத்தூறல் மற்றும் பிரேக் கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்பக் கணக்குகள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













