எல்ல பேருந்து விபத்தில் உயிர்தப்பிய ஒருவர், விபத்துக்கு முன்பே ஓட்டுநர் பிரேக் செயலிழந்தது விட்டது என கூறியதாக தெரிவித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, வளைவை எடுக்கும் தருணத்தில் ஓட்டுநர் “பிரேக் வேலை செய்யவில்லை” என்று தெரிவித்ததாக கூறினார்.

அந்தக் கருத்தை கண்டக்டர் மற்றும் அருகில் இருந்த சில பயணிகள் சிரிப்பாக எடுத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால், இரண்டாவது வளைவை எடுக்கும் போது உண்மையில் பிரேக் செயலிழந்தது புரிந்தது. பேருந்து எதிரே வந்த வாகனத்தில் மோதிய பின் பள்ளத்தில் கவிழ்ந்தது. நான் சுமார் ஒரு மணி நேரம் மயக்கத்தில் இருந்தேன். ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தால் விழித்தேன். நகர முடியாமல் இருந்த என்னை பின்னர் எஸ்டிஎப் (STF) வந்து மீட்டது,” என அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.









