Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்து விபத்திற்கான காரணம்? உயிர் தப்பியவரின் வௌிப்படுத்தல்

பேருந்து விபத்திற்கான காரணம்? உயிர் தப்பியவரின் வௌிப்படுத்தல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24 ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 34 பயணிகள் இருந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (04) இரவு 9 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 23 ஆவது மற்றும் 24 ஆவது கிலோமீட்டர் தூண்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து முன்புறத்தில் இருந்து வந்த ஒரு சொகுசு கார் மீது மோதி, வீதியில் உள்ள பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது நொறுங்கியுள்ளது.

இருப்பினும், விபத்துக்குப் பிறகு மிக விரைவாக செயல்பட்ட அப்பகுதி மக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது, ​​பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியதலாவ வைத்தியசாலைகளில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் உட்பட 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் 6 ஆண்கள் மற்றும் 9 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் தங்காலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தங்காலை நகரசபையின் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்றும் பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க உறுதிப்படுத்தினார்.

சடலங்கள், தியதலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பேருந்து அதன் அதிவேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒருவர் ஊடகங்களுக்குத் முக்கிய தகவல் ஒன்றை வௌிப்படுத்தியுள்ளார்.

விபத்துக்கு முன்னர் பேருந்தின் சாரதி, பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு