Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

அநுர அரசாங்கத்திடம் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை!

1 year ago
in செய்திகள்

“எங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்தாமல் எங்கள் உணர்வுகளை மதித்து அபிலாஷைகளைக் கருத்தில் எடுத்து தீர்மானத்துக்கு வர வேண்டும் எனப் பொறுப்போடு ஜனாதிபதியையும் அரசையும் கேட்டுக்கொள்கின்றோம்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”அரசின் பார்வையில் நாங்கள் இனவாதிகள். ஜனாதிபதிக்குரிய மரியாதையாகச் சொல்ல விரும்புகின்றேன். நான் மட்டுமல்ல, இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஏனைய தமிழ்க் கட்சிகள் எதுவுமே இனவாதக் கட்சிகள் அல்ல.

எங்களை இனவாதம் பேச வைத்தது யார்? தென்னிலங்கை இனவாதிகளே. 1940 மட்டும் நாங்கள் தமிழ்த் தேசம் கேட்டமா? 1920 பண்டாரநாயக்க சமஷ்டி கேட்ட போது நாங்கள் அதை வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தோம். சிங்களம் மட்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறியது சாணக்கியனின் பேரனார் இராசமாணிக்கம்.

அப்போது முரண்பாடு ஆரம்பித்தது நீங்களே. நீங்கள்தானே இனவாதம் பேசினீர்கள். நாங்கள் இனத்துவமே பேசினோம். இனவாதம் பேசவில்லை. மலையக மக்களின் பிரஜாவுரிமைகளைப் பறித்தமை, சிங்களம் மட்டும் சட்டம் என ஒவ்வொரு சட்டத்தையும் கொண்டு எம்மைத் தள்ளுகின்ற போதும் நாங்கள் இனவாதம் பேசவில்லை.

சிங்கள மக்களின் இனவாதத்தின் அடிப்படையில் அதை எதிர்கொள்வதற்குப் பாதுகாப்பதற்குமான உரிமைகளைக் கேட்கின்றோமே தவிர இங்கு நாங்கள் நிச்சயமாக இனவாதம் பேசவில்லை.

தமிழ்க் கட்சிகள் இனவாதம் பேசுவதில்லை. நாங்கள் இலங்கையர்கள்தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் நாம் இலங்கைத் தமிழர்கள், எமக்கென்று கலாசாரம் , மொழி, இனம், நிலம் இருக்கின்றன.

பிரிந்து போக நாம் விரும்பவில்லை. நாங்கள் பிரிவினையையும் கேட்கவில்லை. இனவாதம் என்ற வரையறைக்குள் தமிழ் மக்களைச் சேர்க்காமல், தனியே இலங்கைத் தேசியம் என்ற கருத்தியலுக்குள் நாங்கள் கரைந்து வழிந்து போக விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தயவு செய்து ஜனாதிபதியிடமும் அரசிடமும் நாம் கேட்டுக்கொள்வது நாம் சந்திப்பை கோரவிருக்கின்றோம். எங்கள் அடிப்படை உரிமைகளை ஆற அமர இருந்து ஆராய்ந்து பார்த்து எங்களோடு தனியாக மட்டுமல்ல தமிழ் பேசும் பிரதிநிதிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.

எங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்தாமல் எங்கள் உணர்வுகளை மதித்து அபிலாஷைகளைக் கருத்தில் எடுத்து தீர்மானத்துக்கு வர வேண்டும் எனப் பொறுப்போடு அரசையும் ஜனாதிபதியையும் கேட்டுக்கொள்கின்றோம்.”என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
Next Post
சித்துப்பாத்தி மனித புதைகுழி; 45 நாள் அகழ்வு அவகாசம் நிறைவு

சித்துப்பாத்தி மனித புதைகுழி; 45 நாள் அகழ்வு அவகாசம் நிறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.