Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்துப்பாத்தி மனித புதைகுழி; 45 நாள் அகழ்வு அவகாசம் நிறைவு

சித்துப்பாத்தி மனித புதைகுழி; 45 நாள் அகழ்வு அவகாசம் நிறைவு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்றைய நாட்களில் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலும் பேசப்படுகின்ற ஒரு இடத்தின் பெயராக செம்மணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில், செம்மணி- சித்துப்பாத்தி என்பது வெறும் இடத்தின் பெயராக மட்டுமின்றி. அது தமிழின அழிப்பின் அடையாளமாக உருமாறி இருக்கிறது.

இதற்கு நேற்றைய தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட என்பு கூடுகளும் சாட்சியமாக அமைந்திருக்கின்றன.

இதற்கு மத்தியில் சித்துப்பாத்தி மனித புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 45 வது நாள் இன்றாகும். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, 45 ஆவது நாளுடன் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.

எனினும், சித்தப்பாத்தி மனித புதைக்குழி வளாகத்தில், மேலும் என்புக் கூடுகள் காணப்பட கூடும் என நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அகழ்வுக்காக எட்டு வாரங்கள், கால அவகாசம் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கையிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளை இன்றைய தினம் கிடைக்கும் 67601 எதிர்பார்க்கப்படுவதாக சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டோர் முன்னதாக, அடுத்த கட்ட அகழ்வு பணிகளுக்கு தேவையான பாதீட்டை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் 44ஆவது நாளுக்கான அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வெளிப்படுத்தப்பட்ட மனித எலும்பு கூட்டு தொகுதியானது. இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமாக காணப்பட்டது.

கால்கள் மடிக்கப்பட்டு, அமர்ந்திருந்த நிலையில் குறித்த என்புக் கூட்டுத் தொகுதி வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த என்புக்கூடு தொடர்பில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின், இந்து நாகரிகத் துறை சிரேஷ்ட்ட விரிவுரையாளர் எஸ்.ரமணராஜா, புதைகுழிப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதானிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன.

அவர் தனது அவதானிப்பின்படி, இந்த மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை எனவும் தெரிவித்தார்.

அதையடுத்து அது தொடர்பான தெளிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டார்.

இதுவரை சித்துப்பாத்தி மனித புதைக் குழியில் இருந்து 240 மனித என்புக்கூடுகள் வெளிபட்டிருக்கின்றன.
அவற்றில் 235 என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வெற்றுக் காணியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.