Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

9 months ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தமிழின படுகொலையை நினைவு கூர்ந்து, மாநகரப்பகுதி முழுவதும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் இந்த சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் கீழ் வயல் நிலங்களை உள்ளடக்கி இக்கிராமம் அமைந்துள்ளது.

1990களின் ஆரம்பத்தில் உள்நாட்டு யுத்தம் மீண்டும் தீவிரமடைந்ததனைத் தொடர்ந்து சத்துருக்கொண்டானில் பாரிய இராணுவ முகாமினை சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்தார்கள். இதனால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்தார்கள்.

இவ்வாறு தஞ்சமடைந்த மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளில் சென்று குடியமருமாறு இராணுவத்தினர் கூறியதனைத் தொடர்ந்து, மக்கள் தங்களின் வீடுகளில் குடியமர்ந்தார்கள். இராணுவத்தின் கூற்றை நம்பிய தத்தமது வீடுகளில் வசிக்க வந்த மக்களனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களில் எண்பத்தைந்து பேர் பெண்கள்.

இவர்களை முகாமிலிருந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மற்றும் முஸ்லிம் ஊர்க்காவல் படையினரால் பாலியல் வல்லுறவிற்குற்படுத்தி பின், அவர்களின் மார்பகங்கள், கை, கால் போன்றவற்றினை வெட்டி மிக மோசமான முறையிற் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். கைது செய்யப்பட்ட ஐந்து குழந்தைகள் உட்பட அறுபத்தெட்டுச் சிறுவர்களையும் மோசமான சித்திரவதைகளின் பின் சுட்டுக்கொலை செய்ததுடன், பதினேழு பேரளவிலான ஆண்களின் அங்கங்களை வெட்டிச் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். மொத்தமாக இருநூற்றைந்து பேர் இச்சத்துருக்கொண்டான் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தொரு வயதான கந்தசாமி கிருஸ்ணகுமார் மட்டுமே காயங்களுடன் தப்பி வந்து சம்பவத்தினை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் அமைப்பு சம்பவத்தினை வெளிப்படுத்தியது. ஆனால் இராணுவத்தினர் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனத் தெரிவித்ததுடன், மக்கள் அமைப்பின் தலைவரான திரு. அருணகிரிநாதன் அவர்களை மிரட்டி இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை என எழுத்து மூலம் பொய் அறிக்கையினைத் தருமாறு வற்புறுத்தினர். இதனையடுத்து மக்கள் அமைப்பின் தலைவர் தனது பதவியினைத் துறந்தார்.

அதேசமயம் பனிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

09.09.1990 அன்று சத்துருக்கொண்டான் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்;

இ.நாகம்மா (வயது 26 – வீட்டுப்பணி)
இ.தீபா (வயது 10)
இ.ஜெகதீசன் (வயது 10)
ஜி.குமுதினி (வயது 12)
ஜி.நேசம்மா (வயது 25)
ஜி.தேவராசி (வயது 27)
ஜி.சந்திரியா (வயது 19)
ஜி.சீனிதம்பி (வயது 70)
ஜி.வனிதா (வயது 12)
ஈ.ஜீவநாதன் (வயது 30)
யு.மரியமுத்து (வயது 33 – வீட்டுப்பணி)
யு.கோபிக்கண்ணன் (வயது 12)
யி.சீனித்தம்பி
உ.காளிமுத்து (வயது 55 – சுயதொழில்)
உமைத்தம்பி (வயது 70)
நல்லையா ரமச்சந்திரன் (வயது 44 – சுயதொழில்)
க.நல்லையா (வயது 72 – சுயதொழில்)
க.சுரஸ்கரன் (வயது 11)
கந்தன் இளையதம்பி (வயது 55)
கமலா (வயது 09)
கணபதிப்பிள்ளை தங்கமுத்து (வயது 46 – சுயதொழில்)
பி.கந்தசாமி (வயது 29)
பி.கமலநாதன் (வயது 09)
பி.கவிதா (வயது 12)
பி.தமேந்தினி (வயது 04)
பி.ஆச்சிமுத்து (வயது 76)
பி.பொன்னம்மா (வயது 70)
பி.சந்தனம் (வயது 37)
பி.சிறிலட்சுமி (வயது 18)
பி.வினோதினி (வயது 12)
பி.வசந்தி (வயது 23)
பிரபா (வயது 02)
ரி.டிலானி (வயது 05)
ரி.நந்தினி (வயது 16)
ரி.நாதன் (வயது 12)
ரி.நாகேஸ்வரி (வயது 37)
ரி.நிதர்சினி (வயது 12)
ரி.குகன் (வயது 10)
ரி.கிருபாகரன் (வயது 03)
ரி.கண்மணி (வயது 32)
ரி.கண்ணன் (வயது 25)
ரி.பூபாலப்பிள்ளை (வயது 65)
ரி.பரம்சோதி (வயது 37)
ரி.பிரதீபன் (வயது 05)
ரி.தில்லையம்மா (வயது 63)
ரி.மகாலட்சுமி (வயது 31)
ரி.மலை (வயது 55)
ரி.ஜெயக்காந்தன் (வயது 10)
ரி.ஜெகன் (வயது 09)
ரி.மோகனச்சந்திரன் (வயது 27)
ரி.செல்வா (வயது 07)
ரி.சிறி (வயது 28)
ரி.விஜயகுமார் / குமரன் (வயது 08)
ரி.விஜயலட்சுமி (வயது 29)
ரி.வசந்தி (வயது 01)
ரி.ராசேந்திரன் (வயது 04)
ஐ.முருகன் (வயது 65)
வை.தங்கம்மா (வயது 38)
வைரமுத்து அற்புதவடிவேல் (வயது 46 – சுயதொழில்)
த.கணபதிப்பிள்ளை (வயது 50)
தம்பிப்பிள்ளை (வயது 72)
தம்பிஐயா கிருபைரத்தினம் (வயது 50 – சுயதொழில்)
ம.செல்வநாயகம் (வயது 55)
மு.ராமையா (வயது 70)
ஆர்.கமலராஜ் (வயது 11)
ஆர்.நேசம்மா (வயது 62)
ஆர்.சுதாகரன் (வயது 10)
ஆர்.விஜி (வயது 08)
ஆர்.வசந்தி (வயது 15)
அழகையா நாகரெட்ணம் (வயது 16 – வீட்டுப்பணி)
அழகையா மஞ்சுளா (வயது 14 – வீட்டுப்பணி)
அழகையா சௌந்தரராஜன் (வயது 12 – மாணவன்)
ஜெ.விஜயலட்சுமி (வயது 10)
ஜெ.ரமணி (வயது 02)
கே.மூத்ததம்பி (வயது 79)
கே.இளையதம்பி (வயது 55)
கே.ஈழன் (வயது 15)
கே.நாகரட்ணம் (வயது 40)
கே.நல்லையா (வயது 72)
கே.நல்லம்மா (வயது 66)
கே.கரிகரன் (வயது 08)
கே.கதிர்காமத்தம்பி (வயது 75)
கே.கதிர்காமத்தம்பி (வயது 68)
கே.குமுதா (வயது 23)
கே.கமலன் (வயது 06)
கே.கீதா (வயது 12)
கே.கிருஸ்ணபிள்ளை (வயது 14)
கே.கண்ணன் (வயது 10)
கே.பாக்கியம் (வயது 46)
கே.தாரணி (வயது 04)
கே.தம்பையா (வயது 65)
கே.தங்கம்மா (வயது 75 – வீட்டுப்பணி)
கே.தங்கவேல் (வயது 26)
கே.அரசம்மா (வயது 60)
கே.நேசம்மா (வயது 48)
கே.சதீஸ் (வயது 04)
கே.சியாமளா (வயது 13)
கே.சின்னமுத்து (வயது 66)
கே.சிவதர்சன் (வயது 05)
கே.சவுந்தரம் (வயது 38)
கே.விமலா (வயது 02)
கே.வசிகலா (வயது 13)
கே.ராசாத்தி (வயது 12)
கே.ரமேஸ்கரன் (வயது 07)
பெரியதம்பி (வயது 75 – சுயதொழில்)
தேவி (வயது 32)
செபஸ்லின் செல்வநாயகம் (வயது 45 – கூலித்தொழில்)
வேணுராஜ் (வயது 25)
லெட்சுமி (வயது 48 – சுயதொழில்)
ஞா.சௌந்தரராயன் (வயது 26)
சாந்திமதி (வயது 20 – தனியார்தொழில்)
சாமித்தம்பி அழகையா (வயது 34 – கூலித்தொழில்)
சின்னத்தம்பி வேலுப்பிள்ளை (வயது 68 – சுயதொழில்)
சீனி கோபால் (வயது 57)
சித்திராதேவி (வயது 29)
சிவதர்சினி (வயது 04)
வி.நல்லையா (வயது 27)
வி.பூமணி (வயது 45)
வி.யோதிவடிவேல் (வயது 06 – மாணவன்)
வி.சர்மிளா (வயது 08 – மாணவி)
வி.சாந்திமதி (வயது 20)
வி.லட்சுமி (வயது 48)
இரட்ணராஜா ருக்தி (வயது 06)
ஏ.ஜீவா (வயது 15)
எ.உமைத்தம்பி (வயது 70)
ஏ.நவரட்ணம் (வயது 45)
ஏ.மஞ்சுளா (வயது 18)
ஏ.ஆத்தப்பிள்ளை (வயது 72)
ஏ.அழகையா (வயது 10)
ஏ.அருள் (வயது 09)
ஏ.பொன்னுத்துரை (வயது 62)
ஏ.சுதா (வயது 09)
ஏ.சீத்தா (வயது 18)
எஸ்.இந்திராணி (வயது 10)
எஸ்.ஜீவமலர் (வயது 25)
எஸ்.நாகதேசி (வயது 12)
எஸ்.நிர்மலா (வயது 13)
எஸ்.நல்லையா (வயது 45)
எஸ்.கந்தசாமி (வயது 29)
எஸ்.காசிபதியர் (வயது 60)
எஸ்.கஜேந்தினி (வயது 02)
எஸ்.கவிதா (வயது 09)
எஸ்.குணரட்ணம் (வயது 33)
எஸ்.பாலிப்போடி (வயது 62)
எஸ்.பிரியா (வயது 03 மாதம்)
எஸ்.புண்ணியமூர்த்தி (வயது 13)
எஸ்.தங்கம்மா (வயது 57)
எஸ்.தங்கேஸ்வரி (வயது 24)
எஸ்.தவகுணேஸ்வரன் (வயது 25)
எஸ்.மகேஸ்வரி (வயது 28)
எஸ்.மலர் (வயது 09)
எஸ்.அழகையா (வயது 50)
எஸ்.யோகராசா (வயது 14)
எஸ்.நேசம் (வயது 52)
எஸ்.பொன்னம்பலம் (வயது 55)
எஸ்.பொன்னம்மா (வயது 24)
எஸ்.தெய்வானை (வயது 45)
எஸ்.செல்வராசா (வயது 31)
எஸ்.ஞானேஸ்வரி (வயது 38)
எஸ்.சபாபதிப்பிள்ளை (வயது 70)
எஸ்.சுரேஸ் (வயது 02)
எஸ்.சறோசாதேவி (வயது 28)
எஸ்.சின்னப்பிள்ளை (வயது 35)
எஸ்.சின்னத்தம்பி (வயது 27)
எஸ்.சீவரத்தினம் (வயது 12)
எஸ்.வடிவேல் (வயது 65)
எஸ்.விஜயன் (வயது 01)
எஸ்.வினோதரன் (வயது 05)
எஸ்.வள்ளிப்பிள்ளை (வயது 75)
எஸ்.ராசலிங்கம் (வயது 58)
எஸ்.ரவீந்திரன் (வயது 21)
எய்.நாகரெட்ணம் (வயது 45 – சுயதொழில்)
எய்.சுதா (வயது 09 – மாணவர்)
என்.இராசம்மா (வயது 70)
என்.குமுதினி (வயது 18)
என்.பாக்கியம் (வயது 66)
என்.பாலாத்தை (வயது 70)
என்.பிரேமா (வயது 18)
என்.பிரதீபன் (வயது 05)
என்.தர்சினி (வயது 06)
என்.தீபன் (வயது 09)
என்.ஜெகன் (வயது 12)
என்.சொர்ணம்மா (வயது 44)
என்.வேணுதாஸ் (வயது 03 மாதம்)
என்.வேணுராஜ் (வயது 04 மாதம்)
என்.ஞானரத்தினம் (வயது 32)
என்.சித்திராதேவி (வயது 22)
என்.சிவதர்சன் (வயது 25)
எம்.பாக்கியம் (வயது 53 – வீட்டுப்பணி)
எம்.பரமேஸ்வரி (வயது 32)
எம்.சைலயா (வயது 07)
எம்.வைரமுத்து (வயது 55)
எம்.துளசி (வயது 04)
எம்.பெரியதம்பி (வயது 75)
எம்.தேவகி(வயது 25)
எம்.சுபோசினி (வயது 12)
எம்.சிவஞானம் (வயது 35)
எம்.விஜயன் (வயது 19)
எம்.ராசா (வயது 24)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
Next Post
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.