ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான பா.அரியநேந்திரனினால் குறித்த அறிக்கையின் முதல் பிரதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்து கொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என்போர் கலந்து கொண்டனர்.






















