மட்டக்களப்பில் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டன.
ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இவ்விசாரணைகளில் வாழைச்சேனை, கிரான், வாகரை, செங்கலடி பகுதிகளைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். அழைக்கப்பட்ட 35 பேரில் 33 பேர் வருகை தந்து தங்கள் முறைப்பாடுகளை சமர்ப்பித்தனர்.
கொழும்பு பிராந்திய அலுவலகத்திலிருந்து வருகை தந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தம்பிஐயா யோகராஜா தலைமையிலான அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேநாளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் காணாமற்போன ஆட்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









