Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்கள்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்கள்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் 15 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பேருந்து, ரயில் மற்றும் டாக்ஸி ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடிய வகையில் பல்வகை போக்குவரத்து மையங்கள் கட்டமைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

கொழும்பு உட்பட மேலும் பல பேருந்து நிலையங்களை மேம்படுத்துவதே அமைச்சின் நோக்கம் என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

புறக்கோட்டையில் உள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் நவீனமயமாக்கல் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் ‘க்ளின் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ் 425 ரூபா மில்லியன் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது 08 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்படுகின்றது.

குறித்த புனரமைப்பின் கீழ், பேருந்து நிலையத்தில் புதிய கழிப்பறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறுவப்படவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
Next Post
திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்

திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கே.எச்.சி.சி.குமாரசிங்க நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு