Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
730 நாட்களை கடந்தும் தீர்வு கிட்டாத மயிலத்தமடு, மாதவணை பிரச்சனை; கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

730 நாட்களை கடந்தும் தீர்வு கிட்டாத மயிலத்தமடு, மாதவணை பிரச்சனை; கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

12 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 02 வருட பூர்த்தியைக் கருதி இன்றைய தினம் சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது மேய்ச்சல் தரை காணியை வர்த்தமானிப்படுத்துமாறு கோரியும் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரியும் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி போராட்டம் நடைபெறும் இடம் வரையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மயிலத்தமடு மாதவணை கால்நடை மேய்ச்சல்தரை பகுதியில் கால்நடைகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் எதிராக நடைபெறும் அநீதிக்கு எதிரான அறவழிப்போராட்டம் இரண்டு வருடங்களை கடந்துள்ள அதாவது 730வது நாளாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று (15) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மயிலத்தமடுவில் உள்ள சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை வெளியேற்று, பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதாலா தீர்வு வழங்குவதில் தாமதம், கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்று, பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு மேய்ச்சல்தரையினை வழங்கு, 730நாட்கள் கடந்தும் தீர்வு வழங்காதது ஏன் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் தமது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோசங்களும் முன்வைக்கப்பட்டன.

பாரம்பரியமாக காலநடை வளர்ப்பாளர்களால் மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையில் அயல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அத்துமீறிய விவசாய நடவடிக்கை, காடழிப்பு மற்றும் அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளைக் கொல்லுதல், பண்ணையாளர்களை அச்சுறுத்துதல் போன்ற செயற்பாடுகளை உடன்நிறுத்தி அத்துமீறிய செயற்பாட்டாளர்களை வெளியேற்றி குறித்த பிரதேசத்தை தங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சற்தரையாகப் வர்த்தமானி பிரகடணப்படுத்தக் கோரி கடந்த 2023 ஆண்டு இதே நாளில் கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இருப்பினும் அரசாங்கங்கள் மாறினாலும் குறித்த மேய்ச்சற் தரை விடயம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எந்த அரசாங்கத்தினாலும் எடுக்கப்படாமை குறித்தும் தங்களின் கோரிக்கைக்கு எந்த அரசும் ஒரு நிரந்தரத் தீர்வினை வழங்க முன்வரவில்லை என்ற நிலைப்பாட்டில் இரண்டு வருட பூர்த்தியினை தற்போதைய அரசுக்கு தங்களின் கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ.சிறிநாத், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மகஜர் ஒன்று அரசாங்கத்திற்கு வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சங்கத்தின் தலைவர் நிமலனால் வழங்கிவைக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.