Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

அமரர் திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமரர் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள நினைவு ஊர்திப் பயணம் இன்று (15) திருக்கோவில் பகுதியில் தொடங்கியது.

இந்த நிகழ்வில், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையேற்றார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் கல்லறையில் மலர்மாலை அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் அமரர் திலீபனின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதன்பின், திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய வாகனம் திருக்கோவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, பொத்துவில், ஆலையடிவேம்பு, காரைதீவு, வளத்தாப்பிட்டி, வீரமுனை, கல்முனை மற்றும் பாண்டிருப்பு உள்ளிட்ட அம்பாறை மாவட்ட தமிழர் பகுதிகளுக்கு சென்றடைந்து அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இவ்வாறு அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மற்றும் வடகிழக்கின் பல்வேறு மாவட்டங்களில் ஊர்தி பயணம் நடைபெற்று, இறுதியில் அமரர் திலீபனின் நினைவேந்தல் தினத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நினைவிடத்தில் நிறைவு பெறவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
Next Post
ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

ஐஸ் தயாரிப்பு இரசாயனக் கொள்கலன் வழக்கு; பியல் மனம்பேரியின் சகோதரர் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராகிறார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு