யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில், எதிர்வரும் முதல் திகதி முதல் லஞ்சீட் எனப்படும் பொலித்தீன் பாவனை முற்றிலும் தடை செய்யப்படும் என்று பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தவிசாளர் வின்சன் டீ போல் தலைமையில் உணவக உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை முடிவாக அறிவிக்கப்பட்டது.
பொலித்தீன் பாவனையை முற்றிலும் நிறுத்துவதற்காக உரிமையாளர்களால் மூன்று மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளதையும் தவிசாளர் வின்சன் டீ போல் குறிப்பிட்டார்.









