Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

பாடசாலைகளில் போஷாக்குணவு திட்டத்திற்கு பாதீட்டில் 32 பில்லியன் ஒதுக்கீடு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச பாடசாலைகளில் போஷாக்குணவு வழங்கும் திட்டம் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறித்த திட்டத்திற்காக 32 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில், 8 ஆயிரத்து 943 பாடசாலைகளில் கல்விகற்கும் 1.4 மில்லியன் மாணவர்கள் இந்த திட்டத்தின் ஊடாக பயனடைவதாக கூறப்படுகிறது.

நாட்டில் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆண்டுதோறும் பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

2006 ஆம் ஆண்டு முதல் தேசிய திட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

100 இற்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த உணவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இருப்பினும், திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து ஒரு பாடசாலை அனுமதிக்கப்பட்டிருக்குமானால், மாணவர்களின் எண்ணிக்கை 100இற்கும் அதிகமாக இருந்தாலும் அனைத்து மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

அத்துடன், அனைத்து பாடசாலைகளிலும் 1 முதல் 5 வரையான ஆரம்ப வகுப்புகளிலுள்ள அனைத்து மாணவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

விசேட கல்வி பிரிவுகள் அல்லது விசேட கல்வி நிலையைக் கொண்ட பாடசாலைகளிலுள்ள அனைத்து மாணவர்களும் இந்த உணவுத் திட்டத்திலிருந்து பயனடைவதற்கு தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களும் அவர்களின் ஊட்டச்சத்து நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் இந்த உணவுத் திட்டத்தில் உள்வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

ஹமாஸ் அமைப்புதான் இஸ்ரேலில் இனப்படுகொலை செய்ய முயன்றது; இஸ்ரேல் அமைச்சகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு