விளையாட்டுத்துறை அமைச்சை பெற்றுக்கொள்வதற்காக ஒருசிலர் விசர் நாய்களைப்போன்று நாவை தொங்கக்போட்டுத்திரிகின்றனர். இவர்கள் எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நடவடிக்கை அமைச்சர் ரொஷரன் ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சபை ஒத்திவைப்பின்போது உரையாற்றுகையி லேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-
கிரிக்கெட் நிறுவனத்தில் மாத்திரமல்ல அனைத்துவகையான விளையாட்டுத்துறைகளி லும் ஊழல் மோசடி மலிந்துகாணப்படுகின்றன.
குறிப்பாக கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் மோசடிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றாலும் இது பாரிய சவாலாகும். இதற்காக செயற்படும்போதுபல சவால்களை எதிர்கொள்ள
நேரிடுகின்றது.என்றாலும் கிரிக்கெட் நிறுவனம் உட்பட விளையாட்டுத்துறையில் இடம்பெற்றுவரும்
ஊழல மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அதற்கு எதிராக சிலர் செயற்படு கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் பிரச்னைகளை ஏற்படுத்த அரசாங் கத்தில் இருக்கும் சிலர் செயற்படுகின்றனர். சிலர் இந்த விளையாட்டுத்துறை அமைச்சை பெற்றுக்
கொள்ள விசர்நாய்களைப் போன்று நாவை தொங்கவிட் டுக்கொண்டு திரிகின்றனர். இதற்கு காரணம் சில விளையாட்டுச் சங்கங்களில் இருக்கும் பணமாகும். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்றவகையில் அனைத்து விடயங்களிலும் விரல் குத்த நான் விருப்பம் இல்லை.
நான் தவறு செய்வதாக இருந் தால் அதனை யாருக்கு வேண்டுமானாலும் சுட்டிக்காட்ட முடியும்.
என் சுயாதீனத்தை நான் மதிக் கிறேன். அதேபோன்று விளையாட்டு சங்கங்களினதும் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும்.கடந்த காலங்களில் இந்த விடயங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குசென்றால் பணத்துக்காக கோப்புகளை மறைக்கின்றனர். இதுதான் உண்மை கதை. அதனால் இதனை மாற்றியமைக்க அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்-என்றார்