தேவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படுவத்த பகுதியில் குடும்பத் தகராறின் காரணமாக நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை தாக்கியதில், மகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஹலமட, படுவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி காயங்களுடன் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தடியைக் கொண்டே தனது மனைவி மற்றும் மகன் இருவரையும் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், தேவலேகம பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








