Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

மட்டக்களப்பில் இருந்து நஞ்சற்ற உணவுப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – “சுபிட்சத்தை நோக்கி” என்ற கருப்பொருளின் கீழ், நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பயன்படுத்தப்படாததும் ஆகிய பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மட்டக்களப்பில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் வைபவ ரீதியில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அரசாங்க அதிபர் நேரில் பங்கேற்று உணவுப் பொருட்கள் எவ்வாறு பதப்படுத்தப்படுகின்றன, பொதி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், உதவி பிரதி செயலாளர் திருமதி டிலக்ஷினி சசிதரன், மட்டக்களப்பு காணி ஆணையாளர் என். விமல்ராஜ், கைத்தொழில் அதிகார சபை உத்தியோகத்தர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், வல்சி நிறுவன நிர்வாகி ரி. தயாபரன், ரிச்சா நிறுவனர் க. பாஸ்கரன், வல்சி நிறுவனம் இணைப்பாளர் த. சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் சுமார் 15 வகைகள் அடங்குகின்றன. அதில், மரவள்ளி கிழங்கு, தேங்காய்ப்பால், தேங்கா பூ, வெண்டைக்காய், பயிறு, காளான், நிலக்கடலை, சின்ன வெங்காயம், வற்றவப் பழ ஜூஸ், ஐஸ்கிரீம், முருங்கை இலை, மரவள்ளி இலை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த முயற்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு
செய்திகள்

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளை பார்வையிட புதிய சுற்றுலா வாய்ப்பு

September 26, 2026
Next Post
உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல்; இருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு