ரகசா புயல் வலுவடைந்துள்ள நிலையில் தாய்வானின் ஹுவாலியன் மாவட்டத்திலுள்ள ஏரியொன்று நிரம்பி அதன் தடுப்பணை உடைந்து குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 120 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் ஹொங்கொங் தனது எச்சரிக்கையை 10ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டதுடன், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் ஆகியன மூடப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த சூறாவளியின் காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேறியுள்ளனர்.
தெற்கு சீனப் பகுதியில் அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மண்சரிவும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.








