Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை யாழ் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

நாளை யாழ் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

3 years ago
in செய்திகள்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக தொழிற் சங்க போராட்டம் நடைபெறவுள்ளது.நாளை மதிய உணவு இடைவேளையின்போது (12 – 01 மணி) இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ் பல்கலைக்கழகம், வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை அபிவிருத்தி, உத்தியோகத்தர் சங்கம், பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம், வடக்கு மாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம், வட மாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம், சிறீ லங்கா தபால் தொலைதொடர்பு சேவை உத்தியோ கத்தர் சங்கம், வட மாகாண அரச சாரதிகள் சங்கம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழில்
சங்கம் என்பன கூட்டாக வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில்,அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி – ஈ. பி. எவ். மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி – ஈ. ரி. எவ். நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப் பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த முனைவதன்
மூலம் ஈ. பி. எவ், ஈ. ரி. எவ். நிதியங்களில் கணக்குகளைக் கொண்டுள்ள சுமார் 25 இலட்சம் உழைக்கும் வர்க்க அங்கத்த வர்களின் ஒரேயொரு ஓய்வூதியச் சேமிப்பினை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்த அரசாங்கம் முயல்கின்றது.

பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையின்படி இந்த உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம்இ. பி. எவ், இ. ரி. எவ். கணக்குகளின் மீது சுமத்தப்படும் போது அனைத்து ஊழியர்களினதும் (இ. பி. எவ், இ. ரி. எவ். அங்கத்தவர்களினதும்) சேமிப்புக்களில் இருந்தும் அரைவாசித்தொகை (50வீதம்) எதிர் வரும் 16 வருட காலப்பகுதியில் இல்லா மல் போகும் அபாயம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அரச ஊழியரின் ஓய்வூதிய நிதியையும் இவ்வாறு கையாள அரசாங்கம் முற்படுகின்றது. இதன் மூலம் இ. பி. எவ், இ. ரி. எவ். அங்கத்த வர்களுக்கு நிதிரீதியான உடனடிப்பாதிப்பும் நீண்டகாலத்தில் முழுமையாக இவ்விரு நிதிகளும் கிடைக்கப் பெறாத அபாய நிலையும் உள்ளது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைதிங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள போராட்டங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் இங்குள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து யாழ். மாவட்டச்செயலகம் முன்பாக மதியம் உணவு இடைவேளையின்போது (12 – 01 மணி) ஒரு அடையாள போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றோம். எனவே, இதற்கு அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்பதோடு, மேற்படி இ. பி. எவ், இ. ரி. எவ். மற்றும்
ஓய்வூதிய நிதிக்கையாளல் மூலம் பாதிக் கப்படவிருக்கும் அரச, அரச மருவியமற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்துத் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும், மக்களையும் இந்த அடையாளப் போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம்.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
பெண்ணின் ஆடைகள் திருடும் பலநாள் கள்ளன்; இராணுவ சார்ஜன்ட் கைது!

பெண்ணின் ஆடைகள் திருடும் பலநாள் கள்ளன்; இராணுவ சார்ஜன்ட் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.