Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பின் விடுதலை பெற்ற இலங்கை பொலிஸ் அதிகாரி

போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்குப் பின் விடுதலை பெற்ற இலங்கை பொலிஸ் அதிகாரி

12 months ago
in செய்திகள்

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கடந்த 5.9.2020 ஆம் திகதி நள்ளிரவு படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது, முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸார் இவரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கொழும்பில் பறிமுதல் செய்து துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருளை குறித்த பொலிஸ் அதிகாரி கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் சிறப்பு முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி
செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம் – எதிர்வரும் பட்ஜெட்டில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ள வரிகளை நீக்குவோம் ; ஜனாதிபதி

September 21, 2026
மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!
செய்திகள்

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் வலயங்களில் 13 பாடசாலைகளுக்கு விடுமுறை!

September 21, 2026
அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
செய்திகள்

அரச சேவைக்கு 120,000 பேர் ஆட்சேர்ப்பு; ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!

September 21, 2026
அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!
செய்திகள்

அத்துருகிரிய இரட்டைக் கொலை; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கைது!

September 21, 2026
நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகாத விமல் வீரவன்ச; பிடியாணை பிறப்பிப்பு!

September 21, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளின் தீர்ப்பு நாளை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளின் தீர்ப்பு நாளை!

September 21, 2026
Next Post
கிளிநொச்சியில் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிய சந்தேகநபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிய சந்தேகநபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு