இலங்கை – பலஸ்தீன்நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க இராஜினாமா செய்துள்ளதாக குறித்த சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை (25) பலஸ்தீன் தூதரகத்தில் இடம்பெற்ற இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அவர் அறிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக மகிந்த ராஜபக்ஷ , இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர்களாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








