Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்த வாழைச்சேனை மீனவர்கள்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்த வாழைச்சேனை மீனவர்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கல்குடா கடலில் சட்டவிரோதமான மீன் பிடி முறையான சுருக்கு வலை மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் மீனவக் குழுவொன்றை நேற்று முன்தினம் பிரதேச மீனவர்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டு உரிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இந் நடவடிக்கையின் போது 36 மீனவர்கள் 10 படகுகள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் தங்களால் கைப்பற்றப்பட்டு கல்குடா பொலிஸ் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பேத்தாழை மீனவ சங்கத் செயலாளர் பிரான்சிஸ் ரமேஸ்பாலு தெரிவித்தார். மாங்கேணி,காயான்கேணி, வட்டவான்,நாசிவன் தீவு ஆகிய மீன் பிடி கிராமங்களைச் சேர்நதவார்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

நீண்டகாலமாக தொடர்ந்து நடந்து வந்த இந் நடவடிக்கை குறித்து உரிய மீனவர்களுக்கு தங்களால் பலமுறை அறிவித்தல் விடுத்தபோதிலும் உரிய கவனத்திற்கு கொண்டு வந்திருந்தாலும் இவ் சட்ட விரோத நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.இதையடுத்து நேற்று முன்தினம் (25) அதிகாலை இவர்கள் மீதான சுற்றி வளைப்பை தாங்கள் மேற்கொள்ள நேரிட்டதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருக்காது என மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாக பிரதேச கடலில் வெளிமாவட்ட,உள்ளுர் மீனவர்கள் வருவதனால் தங்களது வழமையான மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதரமும் பாதிக்கப்படுள்ளதாக கவலை தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் முன் வந்து இவ் தீர்மானத்தை மேற்கொண்டு சுருக்குவலை மீன் தொழிலை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தங்களைப் போன்று மாவட்டத்திலுள்ள மீன் பிடி சங்கங்கள் முன் வந்து இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.குறித்த மீன் பிடி சங்கத்தின் செயற்பாட்டை பிரதேசத்தில் பலரும் பாராட்டினார்கள்.

தொடர்புடையசெய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
Next Post
மருந்து வகைகளின் விலைகள் குறைந்தது!

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் கூடிய விரைவில்; சுகாதார அமைச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.