மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், களுதாவளைப் பகுதியில் இன்று (30) பிற்பகல் 12.30 மணியளவில் காரொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த காரே வீதியிலிருந்து விலகி வீதியோர மின்தூணுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது காரில் பயணித்திருந்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர். எனினும், காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








