Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் பயனடைந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள்

10 months ago
in செய்திகள்

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கும் நோக்கில், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் (KSrelief) வழங்கி வரும் மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சியாக, இம் மையம் பார்வையின்மை மற்றும் பார்வையின்மையோடு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை நிறைவு செய்ததது. இத்திட்டமானது, கிழக்கு இலங்கையில் சம்மாந்துறை மற்றும் சுப்ரகமுவா மாகாணத்தில் எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள இரண்டு அரச மருத்துவமனைகளில் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது. இந்தத்தன்னார்வாத் திட்டத்தின் போது பின்வரும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன;

கிழக்கு மாகாணம், சம்மாந்துறை பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு:மருத்துவ பரிசோதனைகள்: 4,336

  • லென்ஸ் பொருத்துதல்கள்: 416
  • மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,028
  • அறுவை சிகிச்சைகள்: 428

சபரகமுவ மாகாணம், எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு::

  • மருத்துவ பரிசோதனைகள்: 4,300
  • லென்ஸ் பொருத்துதல்கள்: 407
  • மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,010
  • அறுவை சிகிச்சைகள்: 410

இந்த மனிதாபிமான முயற்சியானது, கண் பார்வையை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சியானது, அவர்களை தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், சமூக செயற்பாடுகளில் பங்கேற்கவும் உதவுகிறது.

மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் (KSrelief) புள்ளிவிவரங்களின்படி, இந்த மையம் இதுவரையில் இலங்கையில் 25 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதன் மொத்தச் செலவு $15 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கும் அதிகமாகும்.

இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் ஆகியோரின் தலைமையில், சவூதி அரேபியா, தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் மனிதாபிமான முயற்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது. குறிப்பாக சுகாதாரத் துறையில், “சவூதி நூர் ” திட்டம் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள கண் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு
செய்திகள்

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

July 26, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,025 இறக்குமதி வாகனங்கள் முடக்கம்; ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனைக்கு நடவடிக்கை

July 26, 2026
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்
செய்திகள்

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்

July 26, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத ஜோதிட நிலையம் நடத்தி வந்த மூன்று இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத ஜோதிட நிலையம் நடத்தி வந்த மூன்று இந்தியர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.