Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

அரசே போதைப்பொருளை கொண்டுவந்து அதுவே கைப்பற்றுகிறது; சாடும் விமல் வீரவன்ச

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டுக்குள் அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்தார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில்நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தெற்கு மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தில் தான் 323 கொள்கலன்கள் எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்டன.

போதைப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் இலங்கைக்கு வருவதாக சர்வதேச புலனாய்வு பிரிவு அறிவித்த போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு விட்டு இன்று பிறர் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அரச அனுசரணையில் தான் போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டன, அரச அனுசரணையுடன் தான் போதைப்பொருட்கள் தற்போது கைப்பற்றப்படுகின்றன. கைப்பற்றப்படும் போதைப்பொருள் தொகைக்கும், தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று அரசாங்கத்தால் குறிப்பிட முடியாது.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா எனும் போதைப்பொருள் வியாபாரி அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிப்பதற்கு அரசியல் தரப்பில் இருந்து கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இந்த சனா தான் படகு ஊடாக அம்பாந்தோட்டை பகுதிக்கு போதைப்பொருட்களை கொண்டு வந்துள்ளார்.ஆகவே பிறரை குற்றஞ்சாட்ட முன் தமது தரப்பின் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஆராய வேண்டும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
Next Post
சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திசெய்ய தொலைபேசி இலக்கம்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திசெய்ய தொலைபேசி இலக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு