ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவகத்தில் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் இதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
எதிர்க்கட்சியினரை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி விமர்சித்ததாகவும், அதேவேளை அவரது அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
“22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று போராட்டம் நடத்தியதாக அமைச்சர் கூறினார். நாமல் ராஜபக்ஷவுடன் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று புகைப்படம் எடுத்துக்கொண்டதை நாமும் பார்த்ததால், அவர் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.
நாங்களும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்தார்.







