Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம்; குற்றவாளிக்கு 32 ஆண்டு சிறைத் தண்டனை

16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் பலாத்காரம்; குற்றவாளிக்கு 32 ஆண்டு சிறைத் தண்டனை

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார்.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன.

இதனடிப்படையில் அவ்வழக்கின் சந்தேக நபரான சேருநுவர – தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டது.

இவ்வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச தரப்பு சட்டத்தரணியாக தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகியிருந்தார். இதேவேளை அந்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்தவேண்டும், இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் இத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

June 6, 2026
எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
Next Post
மட்டு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மட்டு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு