Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

மட்டு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

11 months ago
in காணொளிகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் காற்றாலை திட்டம் உட்பட கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

“மக்களின் வாழ்வாதாரத்தினையும் இயற்கை சமநிலையினையும் பாதிக்கும் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்துக” என்ற தொனிப்பொருளிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை மக்களின் நிலங்களை பறித்து அந்நிய நாடுகளுக்கு வழங்குவதா அபிவிருத்தி?, இயற்கையினை பாதிக்கும் அபிவிருத்தி திட்டங்கள் வேண்டாம், காற்றாலைக்காக பறவையினங்களை அழிக்கலாமா, மயிலத்தமடு மாதவனையையும் தாரைவார்க்கும் நோக்கமா?, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து முன்னெடுக்கப்படும் இயற்கையினை அழித்து முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டத்தினையும் வடகிழக்கில் முன்னெடுக்க அனுமதிக்கமுடியாது என இங்கு கருத்து தெரிவித்தவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் ஜனநாயக ரீதியாக மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடாத்திவருவோரை பொலிஸார் தாக்கியமை, அச்சுறுத்தியமை என்பது வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அச்சுறுருத்தலாகவே கருதுவதாகவும் ஆட்சிகள் மாறினாலும் அவர்களினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் தொடர்வதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில், கதிரவெளி ,குச்சவெளி, மூதூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கனியமணல் அகழ்வுகளும் மக்களுக்கு ஆபத்தானது எனவும் திருகோணமலையில் முத்துநகர்,சம்பூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சூரிய மின்சக்தி திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தினையும் விவசாயத்தினையும் அழிக்கும் திட்டங்கள் தேவையற்றது எனவும் அனைத்தும் நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
Next Post
கற்பிட்டியில் புதையல் மூலம் கிடைத்த மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

கற்பிட்டியில் புதையல் மூலம் கிடைத்த மாணிக்கக் கல்லை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு