இலங்கையில் தினசரி சுமார் 100 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் எனவும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 35,000 புதிய நோயாளிகள் பதிவாகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதில் மிக அதிக அளவில் காணப்படும் புற்றுநோய் வகை வாய்ப்புற்றுநோயாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது, புற்றுநோய் சிகிச்சை சுகாதார துறைக்கு மிகப்பெரிய சுமையாக உள்ளது. மொத்த மருந்துச் செலவில் சுமார் 30 சதவீதம் புற்றுநோய் மருந்துகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

“புற்றுநோய் மருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவற்றின் விலை மிகவும் உயர்ந்ததாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், 30 முதல் 70 வயதுக்குள் உள்ள இலங்கையர்களில் பெரும்பாலான மரணங்களுக்கு தொற்றில்லாத நோய்கள் (NCDs) காரணமாக உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், மக்கள் புற்றுநோயும் பிற தொற்றில்லாத நோய்களும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.








