Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வசீம் தாஜூதீன் கொலை வழக்கில் செஞ்சிலுவைச் சங்க டிபெண்டர் வாகனத் தொடர்பு குறித்து புதிய தகவல்கள்

வசீம் தாஜூதீன் கொலை வழக்கில் செஞ்சிலுவைச் சங்க டிபெண்டர் வாகனத் தொடர்பு குறித்து புதிய தகவல்கள்

11 months ago
in செய்திகள்

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனத்தை வசீம் தாஜூதின் கொலைச் சம்பவத்துக்க உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிவும் தகவல்கள் கிடைக்கின்றன. எனவே தேவைப்படும் முழுமையான தகவல்கள் விரைவில் கிடைக்கும்” என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

“இலங்கையின் விளையாட்டுத் துறையைப் பற்றி பேசும்போது ரக்பி வீரர் வசீம் தாஜூதீனை தவிர்த்து அதனை பேச முடியாதுள்ளது. எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடாது சிறந்த திறமையான பல விருதுகளை வென்ற ஒரு வீரராவார். எனினும், அவர் துரதிர்ஷ்டவமாக உயிரிழந்துள்ளார்.

அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் குறிப்பிடத்தக்க சந்தேகம் நிலவுகிறது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் தீவரமாக அதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அந்த மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

கஜ்ஜா என்ற போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சி.சி.ரி.வி. விசாரணைகளில் அவர் அந்த படுகொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதனுடன் தொடர்ச்சியாக மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவருகின்றன.

குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகி இந்தோஷேியாவிலிருந்து கைது செய்யப்பட்ட ஒருவர் அதற்கான ஆயுதத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவருகின்றன.

அதேபோன்று செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனத்தை வசீம் தாஜூதீன் கொலைக்கு உபயோகப்படுத்தியுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கின்றன.

அந்த வகையில் வெகு விரைவில் தேவைப்படும் தகவல்கள் முழுமையாக கிடைத்து விசாரணைகளை நிறைவு செய்ய முடியும்” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

September 9, 2026
சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி
செய்திகள்

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

September 9, 2026
Next Post
சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அரசு ஊழியர்கள் அதிகமாகவும் வேதன மட்டம் குறைவு என உலக வங்கி அறிக்கை

சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அரசு ஊழியர்கள் அதிகமாகவும் வேதன மட்டம் குறைவு என உலக வங்கி அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு