ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில், வனவிலங்குத் துறையின் பிரத்தியேக அலுவலகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காட்டு யானைகள் மற்றும் ஏனைய விலங்குகள் விமான நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அணுகல் சாலைகளைக் கடக்கும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வருகின்றன.
இதன் காரணமாக உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விமான நிலைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், புதிதாக நிறுவப்படவுள்ள அலுவலகம், வனவிலங்கு நடமாட்டத்தைக் கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல், தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற விடயங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








