யாழ்.போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (9) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நெடுந்தீவைச் சேர்ந்த 25 வயதுடைய கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

உயர் குருதியமுக்கம் மற்றும் வலிப்பு காரணமாக இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளம் தாய் பிரசவித்த பெண் குழந்தை வைத்தியசாலையில் ஆரோக்கியமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சடலம் மருத்துவ பரிசோதனையின் பின் இன்று(10) உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.








